2013 ஆகஸ்ட் மாதம், காலேஜ் முடித்து இரண்டு மாத காத்திருப்புக்கு பின்னர் "அடிசாம்ப் பாரு அப்பொய்ன்ட்மெண்ட் ஆர்டர் அ" என்பது போல அழைப்பு வந்து சேர்ந்தது. Software வேலை, சென்னை வாழ்கை, இருபதாயிரத்துக்கு மேல் சம்பளம், இனிமேல் நினைத்ததை எல்லாம் நானே வாங்கிக்கொள்ளலாம் என்று மனது சொன்னதையெல்லாம், இரண்டு மாதம் வீட்டு சௌகரியத்துக்கு பழகி போன மனது சற்று குறைவாகவே கொண்டாடியது.
முதல் பிரிவு
அதுவரை அம்மாவை விட்டு பிரிந்ததே இல்லை. Sainik School இல் இடம் கிடைத்ததென்று அப்பா சொன்ன போது வேண்டாம் என்று மறுத்ததும், வேலூரிலேயே காலேஜ் சேர வேண்டும் என்று நினைத்ததும் இதே காரணத்திற்காக தான். எல்லா வாரமும் weekend ற்கு வீட்டிற்கு வந்துவிட போகிறோம், நினைத்த போதெல்லாம் மொபைல் இல் அம்மாவோடு பேசிக்கொள்ளலாம் என்ற எல்லாரும் சொல்லும் முதல் கட்ட சமாதானத்திர்கு பிறகு புலம் பெயர தேவையான பொருட்கள் வாங்கும் படலம் தொடங்கியது. Formal dress, shoes, முகம் பார்க்க சின்ன கண்ணாடி, stool, மெத்தை என ஒரு ஒரு நாள் ஒரு ஒரு பொருள் வீடு வந்து சேர்ந்தது.
OMR ரோடு
என்னை போல கழுத்தில் ID Card மாட்டி, காதில் headphone அணிந்து, cell phone இல் மூழ்கி உலகத்தை மறந்து, தானாக பேசிக்கொண்டு செல்பவர்களுக்கென்றே சென்னை இல் ஒதுக்கி விடப்பட்ட இடம் தான் OMR ரோடு. இந்த OMR ரோட்டில்ருந்துதான் உலகத்தின் மிக பெரிய நிறுவங்கள் என்று நாம் பட்டியிலடிம் கம்பெனிகளுக்கு தகவல் தொழில்நுட்ப பணிகள் செய்து கொடுக்கபடுகின்றன.
Tolet Board
தெரு தெரு வாக வீடு தேடி அலைந்தோம் நானும் நண்பன் சரணும். பகலிலேயே Tube Light போட்டால் தான் பக்கத்தில் இருப்பவரே தெரிவார் என்கிற அளவுக்கு ஒரு வீடு ( அநேகமாக சித்ஹார்த் அபிமன்யு வாழ்ந்த வீடாக இருக்கும் என நினைக்கிறேன்), ஒரு சுமாரான PG , மிகவும் பிஸியான ஒரு குறுகலான தெரிவில் முதல் தளத்தில் ஒரு சின்ன வீடு (சின்னாதாக இருந்த வீடு) என அறுபடை வீடுகளையும் அலசிய பின்பும் ஒன்றும் சரிபட்டுவரவில்லை. கடைசியாக ஒரு Tolet போர்டு கை கொடுத்தது. அதிலிருந்த எண்ணுக்கு அழைத்தோம். ஒரு வீட்டு புரோக்கர் வந்தார். அவர் காண்பித்த வீடுகளில் ஒன்று நாங்கள் வேலை செய்யும் கம்பெனி க்கு நேர் எதிரில் இருந்தது. திருபரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா… திருத்தனி மலை மீது எதிரொலிக்கும் என்பதை போல, எங்கள் அந்த வீட்டில் இருந்து எட்டி வெளியில் பார்த்தல் ஆபீஸ் பில்டிங் தெரியும்.
தினந்தோறும்...
9 மணிக்கு ஆபீஸ்-ல் இருக்க வேண்டும். நான் ஒரு நிதானக்காரன். 8 மணிக்கு எழுந்து பொறுமையாக 9 மணி வரைக்கும் ரெடி ஆகிகொண்டிருப்பேன். சரண் 8.40 க்கு எழுந்து 8.55 க்கு வெளியில் நின்று shoe lace கட்டிகொண்டிருப்பான். அப்படியொரு தனித்திறமை அவனிடம் இருந்தது. ஆபீஸ்க்குள் நுழைந்த வுடன் கீழே cafeteria வில் காலை உணவு முடிப்போம், நேரமிருந்தால். அப்போது training இல் இருந்தாதால் இன்றைய IT வாழ்கையில் resource கள் பட்டியலிடும் அணைத்து வகை களேபரங்களையும் காண கிடைக்கவில்லை. காலையில் ஒரு trainer வருவார் ஒரு ஈமெயில் ஐ எப்படி professional ஆகா compose செய்வது முதல் லிப்ட் இல் பயணம் செய்யும் பொது பேசக்கூடாது என்பது வரையான நடைமுறையில் சாதியமில்ல்லாத பலவற்றை சொல்லிகொடுப்பார். இப்படியாக ட்ரைனிங் நல்லபடியாக தான் போய்கொண்டிருந்தது. அப்போது வரைக்கும் அந்த வேலையே நான் மூன்று மாதத்தில் விடுவேன் என்று நினைக்கவில்லை.
ராணிபேட்டை - சென்னை
ராணிபேட்டை போல ஒரு கிராமத்திலும் சேர்க்க முடியாத நகரத்திலும் சேர்க்க முடியாத ஊரிலிருந்து சென்னை போல ஒரு சிட்டி க்கு வந்தது எனக்குள் சிந்தனை ரீதியாக பல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. ஒருவன் தனது comfort zone க்கு வெளியே வந்து இயங்க தொடங்கும் பொது தான் அவன் சுயத்தை அவனால் எளிதில் அறிய முடியும் என்று நம்புகிறேன். சென்னையில் அது எனக்கு நடந்தது.
Training
Training
Training இல் என்னுடைய batch இல் இருந்தவர்கள் நண்பர்களானார்கள். சிலரை முதலில் சுத்தமாக புடிக்கவில்லை. பேசி பழகிய பின்பு, "இவர்களையா நமக்கு புடிக்காமல் போனது?" என்று எனக்குள்ளயே பலமுறை கேட்டுகொண்டிறேக்கிறேன். அவ்வளவு prejudice செய்திருக்கிறேன். இங்கே பின்னாளில் அவர்களோடு பேசி புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததினால் இதை என்னால் உணர முடிந்தது. பள்ளியிலும் கல்லூரியிலும் இவ்வாறு பலரை பற்றி யார் சொல்ல கேட்டோ அல்லது என் உள் உணர்வு சொல்வாதாக புரிந்து கொண்டோ, கடைசி வரை அதே எண்ணத்தோடு இருந்திருக்கிறேன். வாழ்கையில் அதற்கு பிறகு prejudice செய்வதை நிறுத்திக்கொண்டேன்.
நண்பர்கள் நெருங்கிய நண்பர்களானார்கள். Saran, Prem, Bharathi , Suganthi , Ashwinya என எல்லாரும் என் வாழ்வில் தவிர்க்க முடியாதவர்கலானார்கள். மற்ற நண்பர்கள் எங்கள் gang கிற்கு Island என பெயரிடும் அளவிற்கு நாங்கள் ஒன்றாகவே சுற்றிதிரிவோம். Training முடிந்தது. இந்த பதிவும் முடிந்தது. மீண்டும் எழுதுகிறேன்.
No comments:
Post a Comment